’இது எனக்கு அவசியமில்லை..சிம்பிளி வேஸ்ட்’ பிக்பாஸில் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்

புதுமையான போட்டிகளை நடத்தி போட்டியாளர்களுக்குள் பிரச்னையை உருவாக்குவதால் பிக்பாஸ் 5 சீசன் மெதுவாக சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் திறனையும் செயலையும் பரிசோதிக்கும் வகையில் சில போட்டிகள் நடத்தப்படும் . பெரும்பாலும் அவை இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டு நடைபெறும் என்பதால் அங்கேயே குழு மனப்பான்மை உருவாகி பிரச்னைகள் வளரத் தொடங்கும். 

இதையும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் கங்கனா ரணாவத்: தலைவர்கள் கண்டனம்

அந்த வகையில் பிக்பாஸ் 5 சீசனில் சில நாட்களாக நடக்கிற போட்டிகள் உள்ளே இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டுவது போல இருப்பதால் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இன்றைய இரண்டாவது புரோமோவில் இசைவாணிக்கு தொட்டால் சிணுங்கி பட்டத்தை இமான் அண்ணாச்சி வழங்கியதும் இசை கோவத்துடன் ‘ எதுவா இருந்தாலும் ஓபனா பேசுவேன். இது எனக்கு அவசியம் இல்லை’ என மேடையை விட்டு கீழே இறங்குகிறார்.

நிரூபிற்கு ‘சிம்பிளி வேஸ்ட்’ பட்டம் கொடுக்கப்பட்டது. அது அவருக்கா? இல்லை பிக்பாஸ் 5-க்கா என வருகிற நாட்களில் தெரிய வரும்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>