இதை ஃபேஸ்புக்கில் பகிர முடியுமா? முடியாதா? ஃபேஸ்புக் இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் மார்க்!

2780

நாம் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் காரியம் வாட்ஸப், ஃபேஸ்புக்கில் நமக்கு வந்திருக்கும் குறுஞ்செய்திகளையும் தகவல்களையும் படிப்பதுதான். அதன் பின்னர் தான் அந்த நாள் தொடங்கும். சிலர் தங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை நேரடியாக ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருப்பார்கள். உண்டது, உறங்கியது, காதலித்தது, திருமணம் செய்து கொண்டது, குழந்தைகள் பெற்றது, விவாகரத்தானது, இறந்து போவது (அதை நண்பர்கள் பார்த்து கொள்வார்கள்) இப்படி ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஃபேஸ்புக் வசம் ஒப்படைத்தவர்கள் பலர் உள்ளனர். ஃபேஸ்புக் ப்ரெண்ட்ஸ் என்று ஒரு க்ரூப் வாட்ஸப்பில் இறங்கி வாழ்க்கைக்குள் ஊடுருவும். நன்மை தீமை என இரண்டும் கலந்துள்ள இந்த மெய்நிகர் வாழ்க்கையை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் நம்மைப் பற்றி நமக்கே தெரியாத விஷயங்களைக் கூட அவர்கள் சொல்லிவிடுவார்கள். யார் அவர்கள்? அவர்கள் தான் செயலிகள் (ஆப்) மூலம் நமக்கு ஆப்பு வைக்கத் துடிப்பவர்கள். நம்முடைய தகவல்கள் அனைத்தையும் திருடி பத்திரமாக டேட்டா பேஸில் சேமித்து வைத்துள்ளனர். அண்மையில் நடந்த சம்பவம் இதனை உண்மையென உறுதியாகச் சொல்கிறது.

ஃபேஸ்புக்கில் நடந்த சில தவறுகளால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் லட்சக் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை எடுத்தாளக் கூடிய நிலை ஏற்பட்டள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்பது ஒரு அரசியல் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தவறை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நம்பிக்கை மீறல் நடந்துவிட்டது’ என தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார் மார்க்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் ‘மிகவும் வருந்துகிறேன். நேர்மையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு தொலைகாட்சி பேட்டியில் தெரிவித்தார் மார்க். இது எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாதவும் தெரிவித்தார்.

‘ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு. உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது; எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு சேவையாற்றும் தகுதியை நாங்கள் இழப்போம் என்ற மார்க், இனி வரும் காலங்களில் செயலிகள் மூலமாக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை எடுத்தாளும் நிலையை மாற்றி அதற்கான செட்டிங்க்ஸ்களை  கடுமையாக்கிவிடுவோம் என்று மார்க் உறுதி கூறினார்.

ஃபேஸ்புக் பின் வரும் முடிவுகளை எடுத்துள்ளது. இனி வரும் காலஙக்ளில் ஃபேஸ்புக்கில் எந்தவொரு செயலியையும் பயனாளிகள் மூன்று மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், அந்தப் பயனாளிகளின் தகவல்கள் அந்த குறிப்பிட்ட செயலியிலிருந்து நீக்கப்படும். ஒரு செயலியை தரவறக்கம் செய்யும்போது பயனாளிகள் தரும் தகவல்களை குறைத்து பெயர், புகைப்படம், மின்னஞ்சல் ஆகியவற்றை மற்றும் பெறுவது. இனிமேல் செயலிகளை உருவாக்குபவர்கள், தனிநபர் தகவல்களையோ பதிவுகளையோ பெற வேண்டுமெனில் அப்பயனாளர்களின் சம்மதம் கேட்டு கையெழுத்து ஒப்புதல் பெற வேண்டும்

நல்ல முடிவுதான். ஆனால் இதை முன்னரே செய்திருந்தால் பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம்.

<!–

–>