இந்தப் போட்டிக்குப் பிறகு விளையாட மாட்டேன்: பிரபல ஆஸி. வீரர் அறிவிப்பு

 

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார்.

33 வயது மேத்யூ வேட், ஆஸி. அணிக்காக 36 டெஸ்டுகள், 97 ஒருநாள், 55 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து ஆஸி. அணிக்கு வெற்றியை அளித்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக வேட் அறிவித்துள்ளார். ஒரு பேட்டியில் இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸி. அணியில் இடம்பெற்று உலகக் கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஊக்கமாக உள்ளது. இதற்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன். டி20 உலகக் கோப்பையை மீண்டும் வெல்வதே என் லட்சியமாக உள்ளது என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>