இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

 

இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. 

ஒருநாள் தொடருக்கான மே.இ. தீவுகள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இரண்டரை வருடங்கள் கழித்து கெமர் ரோச் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என மே.இ. தீவுகள் அணி வென்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மே.இ. தீவுகள் அணி வீரர்கள், இந்தியாவில் நடைபெறும் டி20 தொடருக்கும் தேர்வாகியுள்ளார்கள். 

பொலார்ட், ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளார்கள். 

மே.இ. தீவுகள் டி20 அணி

பொலார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், பிராண்டன் கிங், ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>