இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. கடைசியாகக் கடந்த 2019-இல் விளையாடிய டுவான் ஆலிவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இதையும் படிக்கஆஷஸ்: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட முக்கியப் பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்க்கியா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகலா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

அணி:

டீன் எல்கர் (கேப்டன்), தெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, சாரெல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, எய்டன் மார்கிரம், வியான் முல்டர், அன்ரிச் நோர்க்கியா, கீகன் பீட்டர்சன், ராசி வாண்டர் டுசன், கைல் வெர்ரீன், மார்கோ ஜான்சென், கிளென் ஸ்டர்மேன், பிரேனலன் சுப்ராயென், சிசண்டா மகலா, ரியான் ரிக்கெல்டன், டுவான் ஆலிவர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>