இந்தியா – தென் ஆப்பிரிக்க தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது

தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்கானப் பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நான்காம் அலை கரோனா தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ரசிகர்கள் பார்வையிட மாற்று வழிமுறைகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>