இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா: பிசிசிஐ அறிவிப்பு

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட, துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கியுள்ளார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வாகியுள்ளார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வாகியுள்ளார்கள். 

காயம் காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். அவரை மருத்துவக்குழு பரிசோதித்து வருகிறது. கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்படுவார். உடல்நலக் குறைவு காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்ட நிலையில் 2-வது டெஸ்டிலும் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>