இந்திய ஒருநாள் அணியிலும் அஸ்வின்?: சஹாலுக்கு ஆதரவளிக்கும் ஆகாஷ் சோப்ரா

 

இந்திய ஒருநாள் அணியில் அஸ்வின் இடம்பெற்றாலும் சஹால் தான் இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வானார். இரு டி20 ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியினரின் பாராட்டையும் பெற்றார். 

இதனால் இந்திய ஒருநாள் அணியிலும் அஸ்வின் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. இதுபற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக சஹால் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியில் ஜடேஜா கட்டாயமாக விளையாட வேண்டும். ஏனெனில் இந்திய அணியில் வேறு ஆல்ரவுண்டர் கிடையாது. தென்னாப்பிரிக்காவில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என நான் நினைக்கவில்லை. எனவே இந்திய அணியில் சஹாலும் ஜடேஜாவுமே இடம்பெறுவார்கள். இந்திய ஒருநாள் அணிக்கு அஸ்வின் தேர்வாகலாம். அக்‌ஷர் படேல், சஹார், வருண் சக்ரவர்த்தி போன்றோரும் ஒருநாள் அணியில் இடம்பெறுவதற்குப் போட்டி போடுவார்கள். ஆரம்பத்தில் நம்மால் விக்கெட்டுகளை எடுக்க முடியாவிட்டால் நடு ஓவர்களில் கட்டாயமாக எடுக்க வேண்டும். எனவே மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தினோம். விரல் சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகள் எடுத்தால் அவர்களைத் தேர்வு செய்யலாம். அஸ்வின் எப்போதும் தரமான பந்துவீச்சாளர். தரம் எங்கேயும் போய்விடவில்லை. நம்முடைய அணுகுமுறை தான் மாறியுள்ளது என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>