இந்திய வீரர்கள் 4 பேருக்கு கரோனா: மாற்று வீரராக மயங்க் அகர்வால் தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மாற்று வீரராக மயங்க் அகர்வாலை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ வெளியிட்ட செய்தியில்:

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், நவ்தீப் சைனி மற்றும் ஷிகர் தவான் ஆகிய நான்கு வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் மூவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயங்க் அகர்வாலை இந்திய சீனியர் அணியின் தேர்வுக் குழு அணியில் சேர்த்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>