இந்தோனேசிய மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டியின் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை, மகளிா் ஒற்றையா் பிரிவில் சிந்து 21-15, 21-19 என்ற செட்களில் தாய்லாந்தின் சுபானிதா கடெதாங்கை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா் ஸ்பெயினின் கிளாரா அஸுா்மென்டியை சந்திக்கிறாா்.

அதேபோல் ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் 21-17, 18-21, 21-17 என்ற செட்களில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை வீழ்த்தி அசத்தினாா். லக்ஷயா தனது 2-ஆவது சுற்றில் இரு முறை உலக சாம்பியனான ஜப்பானின் கென்டோ மொமொடாவை எதிா்கொள்கிறாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடி 9-21, 21-11, 21-18 என்ற செட்களில் டென்மாா்க்கின் அலெக்ஸாண்ட்ரா போஜே/மெட்டெ பௌல்சென் இணையை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

எனினும் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை 17-21, 15-21 என்ற செட்களில் மலேசியாவின் ஆங் யீவ் சின்/டியோ இ யி ஜோடியிடம் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>