இந்த வீரருக்காக ஆர்சிபி அணி ஒதுக்கியுள்ள ரூ. 20 கோடி: ஆகாஷ் சோப்ரா

 

ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரைத் தேர்வு செய்ய ஆர்சிபி அணி ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத  355 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

ஏலப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் எந்தந்த வீரருக்கு அணிகள் அதிகமாகச் செலவு செய்யும் என்கிற விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ்  சோப்ரா, தனது யூடியூப் தளத்தில் கூறியதாவது:

ஏலம் சுவாரசியமாக இருக்கப் போகிறது. ஷ்ரேயஸ் ஐயர் எப்படியும் ரூ. 15-16 கோடிக்கு தேர்வாக வாய்ப்புண்டு. ஆர்சிபி அணி, ஷ்ரேயஸ் ஐயருக்காக ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ளதாக யாரோ என்னிடம் சொன்னார்கள். அடடா! எந்த அணியும் யாருக்காகவும் ரூ. 20 கோடியை ஒதுக்கக் கூடாது. ஏனெனில் அதற்கு மதிப்பு கிடையாது. இதனால் அணியில் சமநிலையற்ற சூழல் ஏற்படும். சிறந்த கேப்டன் உங்களிடம் இருந்தாலும் அணி மிகவும் பலவீனமாக இருக்கும் என்றார்.

ஷ்ரேயஸ் ஐயர், கடந்த வருடம் தில்லி அணியில் விளையாடினார். 2018, 2019, 2020 ஆகிய வருடங்களில் தில்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட்டார். 2019-ல் தில்லி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. 2020-ல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதால் புதிய கேப்டனைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது ஆர்சிபி அணி. இதனால் ஷ்ரேயஸ் ஐயரை ஆர்சிபி அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>