இந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும்: ஹர்ஷா போக்ளே விருப்பம்

 

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனப் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே விருப்பம் தெரிவித்துள்ளார்.

24 வயது வனிந்து ஹசரங்கா, இலங்கை அணிக்காக 4 டெஸ்டுகள், 29 ஒருநாள், 33 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் 10 விக்கெட்டுகள் எடுத்து கவனம் பெற்றார். ஸ்டிரைக் ரேட் – 5.84. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார். 

இந்நிலையில் சமீபமாகச் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் எனப் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கருத்து தெரிவித்துள்ளார். காலேவில் இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. அதையொட்டி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சுரங்கா லக்மலை எண்ணிப் பார்க்கிறேன். திறமையான பந்துவீச்சாளர். ஆனால் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச அரிதாகவே வாய்ப்பு கிடைக்கிறது. சமீராவுடன் சேர்த்தால் இலங்கையிடம் நல்ல வேகப்பந்து வீச்சுக் கூட்டணி உள்ளது. அவர்களுக்கான ஆடுகளத்தை உருவாக்கலாம். அதேபோல வனிந்து ஹசரங்காவிடம் டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய அவருடைய கருத்தை அறிய விரும்புகிறேன். அவர் கட்டாயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>