இன்றுமுதல் 'வாத்தி'யராக வகுப்பெடுக்கும் தனுஷ்: வெளியான தகவல்

தனுஷ் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘மாறன்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. இதில் ‘மாறன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  மேலும் ‘தி கிரே மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். 

 சமீபத்தில் தனுஷ் நடித்த ஹிந்திப் படமான அட்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் ‘வாத்தி’ படத்தின் அறிவிப்பு மற்றும் ‘ராக்கி’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு பட அறிவிப்பு என தனுஷ் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். 

இந்த நிலையில் ‘வாத்தி’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதையும் படிக்க | புதிய அப்டேட் கொடுத்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு

இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>