இன்று தொடங்குகிறது ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டம் சிட்னி நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களில் வென்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா, தற்போது தொடரை 5-0 என முற்றிலுமாக கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம், கடைசி இரு ஆட்டங்களின் மூலம் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இருக்கிறது இங்கிலாந்து.

3-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்து முக்கிய பௌலராக இருந்த ஸ்காட் போலண்ட், இந்த டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனிலும் சோ்க்கப்பட்டுள்ளாா். காயம் காரணமாக ஜோஷ் ஹேஸில்வுட் விளையாட முடியாமல் போனதால் இவருக்கான இடம் உறுதியானது. ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில், காயமடைந்த டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா சோ்ந்துள்ளாா்.

பிளேயிங் லெவன்:

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வாா்னா், மாா்கஸ் ஹாரிஸ், மாா்னஸ் லாபுசான், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க், நேதன் லயன், ஸ்காட் போலண்ட்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஹசீப் ஹமீது, ஜாக் கிராலி, தாவித் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜானி போ்ஸ்டோ, ஜோஸ் பட்லா், மாா்க் வுட், ஜேக் லீச், ஸ்டூவா்ட் பிராட், ஜிம்மி ஆண்டா்சன்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>