'இன்ஸ்டாகிராம் 2.0': 'லைவ் விடியோ கால்' வசதி அறிமுகம்

Insta_oct25

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டின் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகிய இயங்குதளங்களில் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் வெர்ஷன் 2.0 அறிமுகம் செய்யப்பட்டது.

இதில், லைவ் விடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இதன்மூலம் நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் முகம் பார்த்து பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் இருவரும் சேர்ந்து பேசிக் கொண்ட அந்த விடியோ பதிவை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.

மேலும் இந்த விடியோ பதிவின் போது சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தவர்களை தானாக நீக்கவும், விலகவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடுத்தவருடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியானது இன்ஸ்டாகிராமின் 2.0 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். அதன்படி அந்த பக்கத்தின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள ஐகானின் உதவியுடன் லைவ் விடியோ கால் வசதியை உபயோகிக்க முடியும். 

முன்னதாக, 2016-ம் ஆண்டில் லைவ் விடியோ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், நாம் விரும்பும் காட்சியை நேரடியாக நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.

இதுவரை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் மட்டுமே இருந்த இந்த லைவ் விடியோ கால் வசதி தற்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

<!–

–>