இயக்குநர் சேரன் – கௌதம் கார்த்திக்கின் 'ஆனந்தம் விளையாடும் வீடு' டிரெய்லர் இதோ

சேரன், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப் படத்தை நந்தா பெரியசாமி, எழுதி இயக்கியிருக்கிறார். ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் சார்பாக ரங்கநாதன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக டாக்டர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதா தம்பதியின் இளையமகள் ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சௌந்தரராஜா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, நமோ நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி,நக்கலைட்ஸ் செல்லா, விஜே கதிரவன், மௌனிகா, சூப்பர் குட் சுப்ரமணி, நக்கலைட்ஸ் தனம்  உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | ‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ஆணவப் பேச்சு? வலுக்கும் எதிர்ப்பு: அப்படி என்ன பேசினார்

இந்தப் படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, போரா பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சினேகன் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் உருவாக்கியுள்ளது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>