இயக்குநர் வசந்த பாலன் – ஜி.வி.பிரகாஷின் 'ஜெயில்' பட சில நிமிட காட்சி வெளியானது!

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வருகிற 9 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். 

மேலும் ராதிகா சரத்குமார், பசங்க பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | விஜய் டிவி தொடரில் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேப்ரியலா

இந்தப் படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இந்த நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டம்  தற்போது வெளியாகியுள்ளது. சென்னையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>