இயக்குநர் ஹரி – அருண் விஜய்யின் 'யானை': டீசர் குறித்து வெளியான தகவல்

அருண் விஜய்யின் தங்கை ப்ரீத்தா விஜயகுமாரை இயக்குநர் ஹரி திருமணம் செய்துள்ளார். உறவினர்களான இயக்குநர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் நீண்ட நாட்களாக இணையாமல் இருந்தனர். 

இதனையடுத்து யானை படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க | ”சமூக நீதி பேசினால்தான் மக்களிடம் நெருங்க முடியும்” – பா.ரஞ்சித் அதிரடி  

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>