''இரண்டாவது முறையாக எனக்கு கரோனா, அறிகுறிகள் இதுதான்'' – நடிகை ரைசா உருக்கம்

நாடு முழுவதும் கரோனா பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரைசா தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு தவனை தடுப்பூசி செலுதித்திக்கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. கடுமையான தலைவலி, உடல் வலி, சளி, தொண்டைப் புண், காய்ச்சல் ஆகியவை எனக்கு ஏற்பட்ட அறிகுறிகள். 

இதையும் படிக்க | தனுஷ் படத்திலிருந்து பாதியில் வெளியேறிய கதாநாயகி ?

நான் சென்னையில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு நாள் இந்த வைரஸ் நம்மிடம் இருக்கும் என்று தெரியவில்லை. முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>