'இருவர் முதல் பொன்னியின் செல்வன் வரை… ' – ஐஸ்வர்யா ராய் ஒரு வரலாற்று நாயகி: ஏன் ?

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அந்தப் படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். இளம் வயது ஜெயலலிதாவாக அவரை விட அந்த வேடத்திற்கு யாரும் அவ்வளவு எளிதில் பொறுந்தியிருக்க மாட்டார்கள். 

மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் அம்பானியின் மனைவியாக கோகிலா திருபாய் அம்பாணி வேடத்தில் நடித்திருப்பார். அம்பானி துவண்ட நேரங்களில் உறுதுணையாக இருப்பது என அந்த வேடத்துக்கு அவரே சரியான தேர்வு என நிரூபித்திருப்பார். 

தேவதாஸ் கதையை நாம் பல்வேறு தருணங்களில் கேட்டிருப்போம். தேவதாஸ் என்றவுடன் நாம் நினைவுக்கு வருவது பார்வதி. தேவதாஸ் கதையை தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் ஹிந்தியில் தேவ்தாஸ் பலராலும் மறக்க முடியாது. காரணம் பார்வதியாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். நம் கற்பனையில் வாழ்ந்த பார்வதியை ஐஸ்வர்யா ராய் மிக அழகாக கண்முன் கொண்டுவந்திருப்பார்.

 ஜோதா அக்பர் படத்தில் அக்பரின் மனைவி ஜோதாவாக அவர் நடித்திருந்தார். கதைகளில் நாம் கேட்ட பேரழகியான ஜோதாவை திரையில் மிக சரியாக கண்முன் கொண்டுவந்திருப்பார் ஐஸ்வர்யா ராய். பேரழகி என்றாலே ஐஸ்வர்யா ராய் தானே.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் சீதையாக ஐஸ்வர்யா ராயை விட சிறப்பாக யார் நடித்துவிட முடியும். நடிப்பது ஒருபுறம் இருக்கட்டும். பல நூற்றாண்டுகளாக கற்பனை வடிவமாக இருந்த சீதை என்ற வேடத்துக்கு ஐஸ்வர்யா ராயை விட வேறு யார் சரியாக பொறுந்துவர். 

ராஜ ராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் நந்தினி என்ற கதாப்பாத்திரம் இடம்பெற்றிருக்கும். காண்போர் தடுமாறக் கூடிய பேரழகு என கல்கி வர்ணித்த அந்த வேடம். அந்த வேடத்துக்கு ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு யாரையும் மணிரத்னமால் மட்டும் அல்ல. நம்மாலும் நினைத்து பார்க்க முடியாது. 

இப்படி வரலாற்று கதையானாலும் சரி, ராமாயாணம் போன்ற இதிகாச கதாப்பாத்திரங்களானாலும் சரி மிக சரியாக பொறுந்தக் கூடியவர் ஐஸ்வர்யா ராய். பொதுவாக நாம் வரலாற்று கதைகளை கேட்கும்போதோ அல்லது புதினங்களை படிக்கும்போதோ அந்த வேடங்களை நாம் கற்பனை செய்திருப்போம். அந்த கதைகள் படமாகும்போது நாம் கற்பனையில் உருவாக்கிய பிம்பத்துக்கும் பொறுத்திப் பார்த்தால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும். 

ஆனால் ஐஸ்வர்யா நடித்த வேடங்களுக்கு அதனை விட சிறப்பாக வேறு யாராலும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. அவர் அழகு என்பது மட்டும் காரணமல்ல. அவர் அந்த வேடங்களை மிக இயல்பாக கையாண்டிருப்பார் காரணம். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>