இவருக்கு பதில் இனி இவர் ! சன் டிவியில் இருந்து ஜி தமிழுக்கு செல்லும் நடிகை

 

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் பிரபலமானவர் சுஷ்மா நாயர். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் நிகழ்ச்சியில் நடித்தார். ஆனால் அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 

இந்த நிலையில் சுஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை தொடரில் நடிக்கிறேன். முன்பு போலவே இப்பொழுதும் எனக்கு உங்கள் ஆதரவு தேவை. நான் நிலா என்ற வேடத்தில் நடிக்கிறேன். 

இதையும் படிக்க | மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

ஸ்ரீநிதிக்கு பதிலாக அந்த வேடத்தை நான் நடிக்கவிருக்கிறேன். ஸ்ரீநிதி எப்பொழுதும் ரசிகர்களால் நினைவுகொள்ளப்படுவார். என்று தெரிவித்துள்ளார். இந்தத் தொடரை நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதற்காக ஸ்ரீநிதி மாற்றப்படுகிறார் என்பது குறித்து தகவல் இல்லை. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushma Nair (@sushmanair07)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>