''இவருடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது'' : நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' பட நாயகி நெகிழ்ச்சி

 

மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா  ஹெக்டே. அந்ப் படம் தோல்வியடைய அவருக்கு தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 

இதையும் படிக்க | நாளை வெளியாகிறது தனுஷின் ஹிந்திப் படமான ‘அட்ராங்கி ரே’ டிரெய்லர் : தனுஷ் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா ?

இந்த நிலையில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து இவர் நடித்த அல வைக்குந்தபுரமுலோ படத்தின் வெற்றி இவரை அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக்கியது. நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், பிரபாஸுடன் இணைந்து ராதே ஷ்யாம், சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து ஆச்சாரியா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவருடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>