உங்களுக்கு வரகரிசி அடை பிடிக்குமா? இதோ ரெஸிபி

image

வரகரிசி அடை

தேவையான பொருட்கள்:
வரகு  –  1 கிண்ணம்
கடலைப் பருப்பு – 1/4  கிண்ணம்
துவரம் பருப்பு  1/4  கிண்ணம்
உளுத்தம் பருப்பு  –  2  தேக்கரண்டி
பாசிப் பருப்பு  –  2  தேக்கரண்டி
அவல் – 2  தேக்கரண்டி
வரமிளகாய் – 6
பெருங்காயத் தூள் –  1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்துமல்லி –  சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை  – சிறிது
நறுக்கிய இஞ்சி –  2  தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்னர்,  மிக்ஸியில் வரமிளகாய்,  உப்பு மற்றும் பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர்,  ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி. 
  • இதனை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அவியலுடனும் சாப்பிடலாம்.

<!–

–>