உங்கள் பெயிண்ட் நச்சு வாயுக்களை வெளியேற்றக் கூடியதா? தெரிஞ்சிகிட்டு வீட்டுக்கு பெயிண்ட் அடிங்க பாஸ்!

paint_voc

வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? அப்படியானால், நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பெயிண்ட் கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்கள் (volatile organic compounds)  கலந்த பெயிண்டா அல்லது நச்சுத்தன்மை குறைவான பெயிண்ட்டா என்று தெரிந்து கொண்டு பிறகு வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கத் துவங்குங்கள்.. ஏனெனில் மேற்கண்ட கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்களின் சதவிகிதம் அதிகமிருக்கும் பட்சத்தில் உங்களது பெயிண்ட் அறை வெப்பநிலையிலேயே கூட பதங்கமாகி நச்சுத்தன்மை நிறைந்த வாயுக்களை வெளிவிடக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். ஒருநாள், இரண்டு நாள் என்றில்லை அந்த பெயிண்ட்டை நீங்கள் அடித்த நாள் முதலாய் இந்த வேலை நடந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் உங்கள் வீட்டு பெயிண்ட்டின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் மூக்கை நெருடும் புத்தம் புது பெயிண்ட் வாசத்தோடு சேர்த்து இந்த நச்சு வாயுக்களும் உங்கள் நுரையீரலைப் பதம் பார்க்கத் தொடங்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நச்சு வாயுக்கள் ஸ்லோ பாய்சனாக நமது உடலில் ஊடுருவ இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இதனால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அறிந்தால் அதிர்ந்து போவீர்கள்;

பின் விளைவுகள்…

  • கேன்சர்
  • கல்லீரல் செயல் இழப்பு
  • நுரையீரல் குறைதிறன்
  • ஆஸ்துமா
  • மூளைச்செயல்திறன் குறைதல்

இவையெல்லாம் வேண்டாத விருந்தாளிகளாக நம் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கலாம்.

சரி முதலில் இந்த கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மானங்கள் என்றால் எவையெவை என்று தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்தால் தானே தவிர்க்க முடியும்.

பெயிண்ட்டில் ஃபார்மால்டிஹைட் இருந்தால் அது அறை வெப்பநிலையில் ஆவியாகிக் கசியும் போது குவார்ட்ஸை வெளியிடும். குவார்ட்ஸ் மிக மிகக் குறைவான வெப்பநிலையான – 2 டிகிரி ஃபாரன்ஹீட்டிலேயே பதங்கமாகி அறையில் நிரம்பியுள்ள காற்றில் கலந்து வீட்டிலுள்ள பொருட்கள் முதல் மனித நுரையீரல் வரை அனைத்திலும் படியத் தொடங்கும். இது ஆரோக்யத்துக்கு உகந்தது இல்லை. மேலும் இப்படிப்பட்ட கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்கள் பெயிண்டில் கலப்பது என்வது இருவகைகளில் நிகழ்கிறது.

முதல் வகையில் இயற்கையாகவே சில வகை பெயின்டுகளில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் தனக்குத் தானே மிக எளிதில் பதங்கமாகும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

இரண்டாவது வகையில் மனிதர்களே அப்படியான கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்களை பெயிண்ட் தயாரிக்கும் போது உருவாக்குவார்கள்.
 
இந்த இரண்டு முறையில், எந்த வழியாக இந்த சேர்மங்கள் நமது உடல் உள்ளுறுப்புகளில் ஊடுருவுவதாக இருப்பினும் அது நிச்சயம் உடனடியாக எந்தவிதமான மோசமான உடல்நலக்கோளாறுகளையும் உண்டாக்கி விடப் போவது இல்லையெனினும் இத்தகைய சேர்மங்களால் விளையக்கூடிய கொடிய பாதிப்புகள் தாமதமாகவே தெரிய வரும்.

அதனால் பெயிண்ட்டைத் தேர்ந்தெடுக்கையில் முதலாவதாக நாம் தேர்ந்தெடுக்கும் பெயிண்ட்டில் கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்களின் சதவிகிதம் இருக்கிறதா? எனத் தெரிந்து கொண்டு மிகக் குறைவான அளவில் அவற்றின் சேர்மானங்கள் இருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். 

 

<!–

–>