'உடற்பயிற்சி செய்யும் குழந்தைகளின் சொல்லகராதி கற்றல் திறன் அதிகரிக்கும்'


உடற்பயிற்சி செய்யும் குழந்தைகளின் சொல்லகராதி கற்றல் மேம்படுவதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெலாவேர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இதுகுறித்த சமீபத்திய ‘மொழி பேசுதல் மற்றும் செவிப்புலன் ஆராய்ச்சி இதழில்’ வெளியிடப்பட்டுள்ளது. 

6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளிடம் மூன்று செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதாவது, நீச்சல், கிராஸ்ஃபிட் பயிற்சி, வண்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் ஒவ்வொன்றாக செய்த பின்னர், சொல்லகராதி கற்றுக்கொடுக்கப்பட்டன. 

இதில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்களின் சொல்லகராதி கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக்கி  கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி, மூளையில் இருந்து பெறப்படும் நியூரோட்ரோபிக் காரணி அளவுகளை அதிகரிக்கும் என்றும் இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுவதாக ஆய்வாளர் மேடி ப்ரூட் தெரிவிக்கிறார். 

இதையும் படிக்க | இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் மைதானத்தில் காலியாக இருந்த ஓர் இருக்கை: காரணம் என்ன?

மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு ஒவ்வொரு உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சிகளுக்கேற்ப ஆற்றல் மாறுபடும். நீச்சல் என்பது குழந்தைகள் அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்யக்கூடிய ஒரு செயல். ஆனால், கிராஸ்ஃபிட்டில் ஒவ்வொரு உடற்பயிற்சி குறித்து குழந்தைகளுக்கு விளக்கும்போது அது மூளையின் செயல்பாட்டுக்கும் காரணமாகிறது என்றும் விளக்கமளித்தார். 

ப்ரூட்டின் ஆலோசகரும் இணை ஆசிரியருமான ஜியோவன்னா மோரினி, உடற்பயிற்சி பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவுகின்றன. மொழி கற்றலில் இது எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பது குறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். 

இதையும் படிக்க | ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஒசூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>