உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

 

விரும்புகிறேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசி கணேசன். அந்தப் படம் வெளியாக தாமதமாக ஃபைவ் ஸ்டார் அவரது முதல் படமாக வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் சுசி கணேசன்.

பின்பு அவர் இயக்கிய திருட்டுப்பயலே படம் வெற்றிப் படமாக அமைந்தது.  அந்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் பிரம்மாண்டமாக உருவான கந்தசாமி படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

பின்பு திருட்டுப்பயலே படத்தை ஹிந்தியில் இயக்கிய அவர், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் இயக்கினார். 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசி கணேசன் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். வஞ்சம் தீர்த்தாயடா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் 1980களில் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>