உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக வெளியான தகவல்: புகைப்படம் மூலம் உறுதிபடுத்திய மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்றும் இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

ஆனால் அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில்  மற்றும் வடிவேலு இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். 

இதையும் படிக்க | ‘புஷ்பா’வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடியோ பாடல் வெளியானது

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>