''உன் கூட எப்படி தான் ஒரு படம் நடிச்சேனோ?..'' : பிரியா பவானி ஷங்கர் வருத்தம்

 

ஓ மணப்பெண்ணே படம் குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கரின் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஓ மணப்பெண்ணே. விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்தப் படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் மிகவும் சிலாகித்து பதிவுகள் எழுதி வருகின்றனர். அப்படி ஒரு பதிவில், இவர்கள் இருவர் நடிக்கும் காதல் படத்தை வேறு யாரும் எதிர்பார்க்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதனைப் பகிர்ந்த ஓ மணப்பெண்ணே இயக்குநர் கார்த்திக் சுந்தர், ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி ஷங்கரை குறிப்பிட்டு, ”என்ன பா, பண்ணிடலாமா ?” என்று கேட்டிருந்தார். 

அதற்கு பதிலளித்த கதாநாயகி பிரியா பவானி ஷங்கர், ”உன் கூட எப்படி தான் ஒரு படம் நடிச்சேனோ ? அப்படி ஒருவர் சொன்னார். எனக்கு வருத்தம்பா” என்று தெரிவித்தார். ”அதனை நான் சொல்லவில்லை” என எஸ்கேப் ஆகியுள்ளார் இயக்குநர். கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் அளித்துள்ள பதிலில், ஸ்ருதியின் (பிரியா பவானி ஷங்கர்) டேட்ஸை வாங்குடா. நான் தயார் தான்” என்று தெரிவித்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>