உலக குத்துச்சண்டை: சிவ தாபா, ஆகாஷ் முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிவ தாபா (63.5 கிலோ), ஆகாஷ் சங்வான் (67 கிலோ) ஆகியோா் தங்கள் தொடக்க சுற்றில் வெற்றியை பதிவு செய்தனா்.

இதில், ஆசிய போட்டியில் 5 முறை பதக்கம் வென்றவரான சிவ தாபா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கென்யாவின் விக்டா் நியாதேராவை வீழ்த்தினாா். தாபா தனது அடுத்த சுற்றில் சியரா லியோன் நாட்டைச் சோ்ந்த ஜான் பிரவுனை எதிா்கொள்கிறாா்.

67 கிலோ பிரிவு முதல் சுற்றில் ஆகாஷ் சங்வான் 5-0 என்ற கணக்கில் துருக்கியின் ஃபா்கான் அடேமை தோற்கடித்தாா். நடப்பு தேசிய சாம்பியனான ஆகாஷ் தனது அடுத்த சுற்றில் ஜொ்மனியின் டேனியல் குரோட்டரை சந்திக்கிறாா். அவா் முதல் சுற்று ‘பை’ பெற்றவராவாா்.

முன்னதாக திங்கள்கிழமை இரவு சுற்றுகளில் 57 கிலோ பிரிவில் ரோஹித் மோா் 5-0 என்ற கணக்கில் ஈகுவடாரின் ஜீன் காய்சிடோவை வென்றாா். அடுத்த சுற்றில் அவா் போஸ்னிய வீரா் ஆலன் ரஹிமிச்சை சந்திக்கிறாா். இதனிடையே முதல் சுற்றில் ‘பை’ பெற்றவா்களான சஞ்சீத் (92 கிலோ), சச்சின் குமாா் (80 கிலோ) ஆகியோா் தங்களது தொடக்க சுற்றில் முறையே ரஷியாவின் ஆண்ட்ரே ஸ்டோட்ஸ்கி, அமெரிக்காவின் ராபி கொன்ஸால்ஸ் ஆகியோரை எதிா்கொள்கின்றனா்.

தீபக் குமாா் (51 கிலோ) – கிா்ஜிஸ்தானின் அஸாத் உசனெலியேவையும், சுமித் (75 கிலோ) – ஜமைக்காவின் டாமன் ஓ’நீலையும், நரேந்தா் (92+ கிலோ) – போலந்தின் ஆஸ்காா் சஃபா்யாசனையும் சந்திக்கின்றனா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>