உலக சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் ஸ்ரீகாந்த்

 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கே. ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்பெயினில் உள்ள வெல்வாவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் கே. ஸ்ரீகாந்த், மார்க் கேல்யூவை எதிர்கொண்டார். இருவரும் முதல்முறையாக மோதினார்கள். 

இந்த ஆட்டத்தில் 21-8, 21-7 என  எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் பதக்கத்தையும் இந்தியாவின் 11-வது பதக்கத்தையும் அவர் உறுதி செய்துள்ளார். ஆடவர் பிரிவில் இந்தியா தனது 3-வது பதக்கத்தைப் பெறவுள்ளது. 1983-ல் பிரகாஷ் படுகோனும் 2019-ல் சாய் பிரனீத்தும் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>