உலக சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து காலிறுதிக்குத் தகுதி

 

உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஸ்பெயினில் உள்ள வெல்வாவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். கடைசியாக சோச்சுவாங்குடன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் சிந்து தோல்வியடைந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 21-13, 21-18 என்ற கணக்கில் சிந்து வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். 

இதுவரை கலந்துகொண்ட உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்பு சிந்து தோல்வியடைந்ததில்லை. அந்தச் சாதனையை இந்த முறையும் தக்கவைத்துள்ளார். நடப்பு சாம்பியனான சிந்து, காலிறுதியில் மிகவும் பலம் வாய்ந்த தாய் ஸு யிங்கை எதிர்கொள்கிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>