உலக செஸ் சாம்பியன்ஷிப்: 6-வது ஆட்டத்தில் போராடி வெற்றி பெற்ற கார்ல்சன்

 

துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் – ரஷியாவைச் சேர்ந்த இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் வீரர் உலக சாம்பியனாகப் பட்டம் சூட்டப்படுவார். கேண்டிடேட்ஸ் போட்டியை வென்றதன் மூலம் இப்போட்டியில் விளையாட இயன் நிபோம்நிஷி தகுதி பெற்றார். 

முதல் 5 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் 6-ம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் நிபோம்நிஷி கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். 

இருவருமே வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இரு தரப்பிலும் தவறுகள் நேர்ந்தாலும் கடைசியில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் இதுதான். இதற்கு முன்பு 1978-ல் கார்போவ் – விக்டர் இடையிலான ஆட்டம் 124 நகர்த்தல் வரை சென்றது. அச்சாதனையை இந்த ஆட்டம் முறியடித்துள்ளது. 7 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்துக்கு செஸ் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன் 3.5 புள்ளிகளும் நிபோம்நிஷி 2.5 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள்.  இன்று நாளையும் ஆட்டங்கள் நடைபெறும். திங்கள், ஓய்வு நாளாகும். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>