உலக டூர் பைனல்ஸ்: பிவி சிந்து தோல்வி

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் பேட்மிண்டன் உலக டூர் பைனல்ஸ் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.

உலக டூர் பைன்ல்ஸ் மகளிர் ஒற்றைய இறுதிச் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தென் கொரியாவின் ஆன் சியோங் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மோதினர்.

முதல் கேமில் ஆன் சியோங் 4-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தார். தொடர்ந்து பிவி சிந்து புள்ளிகளைக் குவித்தாலும், ஆன் சியோங்கும் புள்ளிகளைக் குவித்து வந்தார்.

இதையும் படிக்கஆஷஸ்: விளையாடும் லெவனை அறிவித்தார் புதிய கேப்டன் கம்மின்ஸ்

இதனால், 4-7 என்ற கணக்கில் சிந்து பின்னடைவில் இருந்தார். இதன்பிறகு, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆன் சியோங் முதல் கேமை 21-15 என்ற கணக்கில் முதல் கேமை கைப்பற்றினார். 

தொடர்ந்து 2-வது கேமிலும் அதே ஆதிக்கத்தைத் தொடர்ந்த ஆன் சியோங் அதையும் 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி இறுதிச் சுற்றில் வென்றார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>