உலக நீச்சல் சாம்பியன்ஷிப்: ஸ்ரீஹரி நட்ராஜ் சிறப்பிடம்

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரா் ஸ்ரீஹரி நட்ராஜ் சிறந்த இந்திய சாதனை நேரத்துடன் தனது பங்கேற்பை நிறைவு செய்தாா்.

அபுதாபியில் ஃபினா உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 20 வயதான ஸ்ரீஹரி நட்ராஜ் 50 மீ. ஆடவா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 24.40 வினாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக ஹீட்ஸ்களில் 26-ஆவது இடத்தைப் பெற்றாா்.

இது அவரது சிறந்த இந்திய நேரமாகும். ஏற்கெனவே 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அவா் தனது சிறந்த நேரத்தை முறியடித்திருந்தாா். ஸ்ரீஹரி நட்ராஜ் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இந்திய வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>