ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க | பதவியேற்ற இரண்டே நாளில் பஞ்சாப் அமைச்சர் ராஜிநாமா

இந்நிலையில் அன்றைய தினங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தாய்லாந்தில் வெள்ளம்: 6 பேர் பலி

மேலும் இதர மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>