ஊரடங்கு எதிரொலி: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்

கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுபோக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கரோனா: சென்னையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது

இந்நிலையில் சென்னையில் நாளை (ஜனவரி 6) கலாஇ 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>