எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

எடப்பாடி: எடப்பாடி நகர பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு,  அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். 

நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஏ.எம்.முருகன், நகர மன்ற முன்னாள் தலைவர் டி. கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க | எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? – உடனே விண்ணப்பிக்கவும்!

இதேபோல்  கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட மூல பாதை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்வில்,  ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதையும் படிக்க | வாழப்பாடியில் அதிமுக சார்பில்  ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு 

மேலும் எடப்பாடி நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>