எண்ணெயே இல்லாமல் அப்பளம் பொரிக்கலாம்… எப்படி? இதோ இப்படி!

color_color_appalam

தேவையான பொருட்கள்:

  • சிறு சிறு அப்பளங்கள் – தேவையான அளவு
  • தூள் உப்பு: 1 கப்

செய்முறை:

அடுப்பை ஆன் செய்து கடாயை ஏற்றி அதில் 1 கப் உப்பைப் போட்டு ஹை ஃப்ளேமில் நன்கு சூடாக்கவும். உப்பு நன்றாகச் சூடானதும் அதில் அப்பளங்களைச் சிறிது சிறிதாகப் போட்டு நன்கு கிளறவும். சூடான உப்பு மேலே பட பட அப்பளங்கள் பொரியத் தொடங்கும். ஒரு ஈடுக்கு 10 அல்லது 15 அப்பளங்களை மட்டுமே வறுக்கலாம். அதிகம் போட்டு எடுத்தால் அரைகுறையாகப் பொரியும். இந்த முறையில்; அப்பளம் பொரிப்பதால் உப்பு அப்பளத்தில் ஏறி மேலும் உப்புக் கரிக்கும் என்ற பயமே வேண்டியதில்லை. உப்பு சூடாக இருப்பதால் அப்பளத்தின் மீது துளியும் ஒட்டாமல் கீழே உதிர்ந்து விடும். உடல்நலனுக்கும் நல்லது.

அப்பளம் வறுக்கப் பயன்படுத்திய உப்பை மீண்டும் குழம்பு மற்றும் கூட்டு பொரியல் செய்யும் போது மறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம். அதனால் பாதகம்  ஒன்றுமில்லை.
 

<!–

–>