'எதற்கும் துணிந்தவன்': நாளை புதிய அப்டேட்டுடன் வருகிறார் சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சூர்யா நடித்து தயாரித்து வெளியான ஜெய் பீம் படம் தமிழகம் மட்டுமின்றி, மாநிலத்தின் வெளியேவும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, படத்தில் இடம்பெற்ற காட்சி மாற்றியமைக்கப்பட்ட பிறகும், அதுகுறித்த சர்ச்சை இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

இதையும் படிக்கநெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியல் வெளியீடு: 3-வது இடத்தில் தமிழ்ப் படம்!

சூர்யாவின் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது என்கிற அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், இந்த விவகாரத்தில் திரைத் துறையினர், அரசியல் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் நடிகர் சூர்யாவுடன் துணை நிற்பதாக தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். 

சர்ச்சைகளின் தொடர்ச்சியாக அவரது வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், அவரது அடுத்தப் படமான ‘எதற்கும் துணிந்தவன்’ குறித்த புதிய அப்டேட் நாளை பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>