'எதற்கும் துணிந்தவன்' 'ராதே ஷ்யாம்' அடுத்தடுத்த நாளில் உதயநிதி வெளியிடுவதால் சர்ச்சை

 

பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. 

ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. காதலுக்கு விதிக்கும் இடையேயான போராட்டமே இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. 

இதில் எதற்கும் துணிந்தவன் மாரர்ச் 10 ஆம் தேதி வெளியாகிறது என்பதும், ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்க | விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’ பட டிரெய்லர் இதோ

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ் வசனங்களையும் பாடல்களையும் கார்கி எழுதியுள்ளார். படத்துக்கான பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>