'எந்த தமிழ் 'குடி'யின் மகனை சொல்கிறீர்கள்?': சேரனிடம் கேள்வி எழுப்பிய திருமுருகன் காந்தி

இயக்குநரும் நடிகருமான சேரன் ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தை லக்ஷ்மி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் துவக்கவிழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சிம்பு தேவன், மாரி செல்வராஜ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதையும் படிக்க | விஜய் தேவரகொண்டா – மைக் டைசன் இணைந்து நடிக்கும் ‘லைகர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இந்தப் படத்தின் தலைப்பு போஸ்டரை இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனைப் பகிர்ந்த மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி, ”வாழ்த்துகள் தோழர் சேரன், இந்தப் படத்தில் எந்த தமிழ் ‘குடி’யின் மகனை சொல்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்தினால் சிலருக்கு பெருமை பொங்குவதற்கு வசதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த இயக்குநர் சேரன், ”வாழ்த்துக்கு நன்றி தோழர். இந்த தமிழ்க்குடிமகன் எந்த பெருமை பொங்கும் கூட்டத்தோடும் சேராதவன். ஆனால் எல்லோருக்கும் பிடித்தமானவனாக இருப்பான்’ என்று தெரவித்தார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>