'என்னால் நீண்ட தூரம் நடக்க முடியாது, காரணம்…' – தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உருக்கமான பதிவு

பல ஆண்டுகளாக சின்னத்திரை தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், மூட்டுகளில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக என்னால் நீண்ட தூரம் நடக்க முடியாது. அதனால் நான் சக்கர நாற்காலியில் சென்றேன்.

இதையும் படிக்க | நாளையுடன் (ஜன.6) நிறைவடைகிறது 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா

ஆனால் அது என்னுள் இருக்கும் குழந்தையை வெளிக்கொண்டுவருதை தடுக்க முடியாது. இது வாழ்க்கையை வாழாமல் இருப்பவர்களுக்காக என்று குறிப்பிட்டுள்ளார்.  
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>