‘என் ஆட்டத்தை இனிமேல்தான் பார்ப்பீங்க’: பிக் பாஸ் அல்டிமேட்டின் 5-வது போட்டியாளர்

 

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளரை டிஸ்னி பிளஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 5  ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் காணலாம். இதன் மூலம் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம். வரும் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில், கவிஞர் சிநேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி  ஆகியோர் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவது போட்டியாளராக அபிராமியை அறிமுகம் செய்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அபிராமி, இனிமேல் தான் என் ஆட்டத்தை பார்ப்பீங்க எனக் கூறும் வசனத்துடன் கூடிய் விடியோவை டிஸ்னி பிளஸ் வெளியிட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>