''என் குடும்பத்தால் தப்பித்தேன்'': பிக்பாஸில் இருந்து வெளியேறிய அபிநய் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் அபிநய். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பாவனியுடன் அவர் பழகிய விதம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ”எல்லோருக்கும் வணக்கம், கனவு போல இருக்கிறது. நீங்கள் எனக்கு காட்டிய அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த 78 நாட்களில் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கமல் தொகுத்து வழங்கியது என ஒட்டுமொத்த அனுபவம் சிறப்பாக இருந்தது. 

இதையும் படிக்க | ‘பெரியாரை வழிபடுவதா?’ : நடிகர் சித்தார்த் கண்டனம்

நாணயத்துக்கு இரண்டு பக்கம் உள்ளது. நம்முடைய தேர்வு தான் வாழ்க்கையை நல்ல பாதைக்கு கொண்டு செல்லும். இந்த நிகழ்ச்சியில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றாலும், அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல குடும்பம் இருந்ததால் நான் தப்பித்து உள்ளேன். என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் என்னுடன் நின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் நான் தவறாக காட்டப்பட்டிருந்தாலும், தவறாக என்னை பற்றி காட்சிகள் இருந்தாலும் இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி என என் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

பிக்பாஸ் வீட்டில் என்னுடைய பயணம் முடிந்து விட்டது. என்னை நம்பிய எனது குடும்பத்தினருக்கு நன்றி. நேர்மறை செயல்களுக்கு துவக்கமாக இந்த நிகழ்ச்சியை நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>