எர்ஸ்டே பேங்க் ஓபன்: 2}ஆவது சுற்றில் சிட்சிபாஸ், ஸ்வெரேவ்

 

வியன்னா: எர்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் 2}ஆவது சுற்றுக்கு முன்னேறினர். 

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் தனது முதல் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை 7}6 (8/6), 6}4 என்ற செட்களில் வீழ்த்தினார். அடுத்து அவர் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை சந்திக்கிறார். 

மறுபுறம் போட்டித்தரவரிசையில் 2}ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரேவ் 6}2, 7}5 என்ற செட்களில் செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை வென்றார். ஸ்வெரேவ் தனது 2}ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார். 

இதர முதல் சுற்றுகளில் நார்வேயின் காஸ்பர் ரட் 7}5, 7}6 (7/2) என்ற செட்களில் தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிûஸ வெளியேற்றினார்.

போட்டித்தரவரிசையில் 7}ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6}4, 6}2 என்ற செட்களில் அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை வென்றார். மற்றொரு இத்தாலிய வீரரான லோரென்úஸô சொனிகோ 6}4, 6}3 என்ற செட்களில் ஜெர்மனியின் டேவிட் கோப்ஃபரை வீழ்த்தினார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>