எல்லையில் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்புப் படை வீரர்கள்

20201114122L

சிக்கிம் எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்

இந்திய எல்லைகளில் தீபாவளிப் பண்டிகையை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை கொண்டாடினார்கள்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை அனைத்துத் தரப்பு மக்களாளும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், இந்திய-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் குல்தீப் சிங் கூறுகையில்,

“நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளோம். நாங்கள் எல்லையில் இருக்கும் வரை, நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

மேலும், இந்தோ-திபெத் எல்லை காவல்படை சார்பில் லடாக் மற்றும் சிக்கிமில் தீபாவளி கொண்டாடப்பட்டது

இதனிடையே ஜெய்சால்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

<!–

–>