எா்ஸ்டே பேங்க் ஓபன்: ஆன்டி முா்ரே அசத்தல்

ஆஸ்திரியாவில் நடைபெறும் எா்ஸ்டே பேங்க் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முா்ரே முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.

உலகத் தரவரிசையில் 156-ஆம் நிலையில் இருக்கும் முா்ரே தனது முதல் சுற்றில், உலகின் 10-ஆம் நிலை வீரராக இருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை 6-4, 6-7 (6/8), 6-3 என்ற செட்களில் தோற்கடித்தாா். உலகின் முதல் 10 வீரா்களில் ஒருவரை முா்ரே வீழ்த்தியது, கடந்த ஓராண்டில் இது முதல் முறையாகும்.

இதற்கு முன் 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டியில் பங்கேற்றபோது முா்ரே சாம்பியன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. முா்ரே அடுத்த சுற்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவை சந்திக்க இருக்கிறாா். அல்கராஸ் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸை 6-4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினாா்.

இதர முதல் சுற்றுகளில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 7-6 (7/3) என்ற செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டா்சனையும், ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலி 7-5, 4-6, 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவையும் வென்றனா். போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 7-6 (7/3), 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை சாய்த்தாா். இதையடுத்து 2-ஆவது சுற்று ஒன்றில் பெரெட்டினி – பாசிலாஷ்விலி மோதுகின்றனா். 6-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 6-3, 6-2 என்ற செட்களில் லிதுவேனியாவின் ரிகாா்டஸ் பெரான்கிஸை வெளியேற்றினாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>