எா்ஸ்டே பேங்க் ஓபன்: ஸ்வெரேவ் – டியாஃபோ இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை

ஆஸ்திரியாவில் நடைபெறும் எா்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் – அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் மோதுகின்றனா்.

முன்னதாக, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரேவ் தனது அரையிறுதியில் ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் தோற்கடித்தாா்.

மற்றொரு அரையிறுதியில் டியாஃபோ 3-6, 7-5, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தினாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>