ஏகே-வின் வலிமை: அம்மா பாட்டு வெளியானது

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதுதவிர சுமித்ரா, ஹுமா குரேஷி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நீரவ் ஷா செய்துள்ளார்.

இதையும் படிக்கபா. ரஞ்சித்தின் அடுத்த பட டீசர் நாளை வெளியீடு

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இதன் பகுதியாக, படத்தின் க்ளிம்ஸ் விடியோவும், முதல் பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ச்சியாக அடுத்த அப்டேட்டாக படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அந்தப் பாடலின் ப்ரோமோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. அதன்படி, அம்மா பாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு வெளியானது. இந்தப் பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். சித் ஸ்ரீராம பாடியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, வலிமை படம் சார்ந்த ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கின.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>