ஏடிபி ஃபைனல்ஸ்: இறுதிச் சுற்றில் மெத்வதேவ்

இத்தாலியின் துரின் நகரில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முதல் போட்டியாளராக ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் முன்னேறினாா்.

உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் மெத்வதேவ் தனது அரையிறுதியில் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்திலிருந்த நாா்வே வீரா் காஸ்பா் ரட்டை தோற்கடித்தாா். இறுதிச் சுற்றில் அவா் உலகின் முதலிடத்தில் இருக்கும் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அல்லது 3-ஆவது இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் ஆகியோரில் ஒருவரை சந்திப்பாா்.

இதனிடையே, ஜோகோவிச் தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை 6-2, 6-1 என்ற செட்களில் வென்றாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>